
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி மார்ச் 23அம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த ஐபிஎல் சீசனில் யார் அதிக ரன்களை எடுப்பார்கள், அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர் யார், மும்பை இந்தியன்ஸ் அணியில் கவனிக்கப்பட வேண்டிய வீரர் யார் என்பது உள்ளிட்டவற்றை கணித்துள்ளார்.