
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடருக்கான பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் கடந்த ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை நழுவவிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களுடைய முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக அந்த அணி தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோரை தன்னுடைய நான்கு வெளிநாட்டு வீரராக தேர்வு செய்துள்ளார். இதில் பாட் கம்மின்ஸ் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.