ஐபிஎல் ஏலத்தில் இவர் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் - ஆகாஷ் சோப்ரா!
இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மிக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19 அன்று நடக்க உள்ள நிலையில், ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்களின் இறுதிப் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக 1,166 வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க தங்கள் பெயர்களை அளித்து இருந்தனர்.
அதில் தற்போது 333 வீரர்கள் மட்டுமே இறுதிப் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள். மீதமிருந்த 833 வீரர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மிக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பலரும் தங்களது பெயரை ஐபிஎல் ஏலத்துக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வீரர் மிட்செல் ஸ்டார்க். புதிய பந்தில் அவர் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். ஆட்டத்தின் தொடக்கத்தில் விக்கெட்டுகளை எடுக்கும் திறன் வாய்ந்தவர். கடந்த காலங்களில் அவர் பெங்களூரு அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now