
டி20 உலகக்கோப்பையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றில் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடியும் 86 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 200 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஓப்பனிங் வீரர்கள் ஃபின் ஆலன் 16 பந்துகளில் 42 ரன்களையும், டெவோன் கான்வே 58 பந்துகளில் 92 ரன்களையும் விளாசினர். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதுவுமே சரியாக அமையவில்லை.
ஓப்பனிங் வீரர்கள் டேவிட் வார்னர் 5, ஆரோன் ஃபிஞ்ச் 13 என ஆட்டமிழந்தனர். இதன்பின் வந்த மிட்செல் மார்ஷ் 16, மேக்ஸ்வெல் 28, ஸ்டோய்னிஸ் 7 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 17.1 ஓவர்களில் 111 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் 89 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி கண்டது.