டி20 உலகக்கோப்பையில் ஆஸியை வழிநடத்துவது யார்? - ஜார்ஜ் பெய்லி பதில்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் ஆரோன் ஃபிஞ்ச் தான் கேப்டனாகச் செயல்படுவார் என ஆஸ்திரேலியத் தேர்வுக்குழுத் தலைவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 4-1 என வென்றது ஆஸ்திரேலியா. எனினும் கேப்டன் ஃபிஞ்ச், 5 இன்னிங்ஸில் 78 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தோற்ற கடைசி டி20 ஆட்டத்தில் 8 ரன்களே எடுத்தார். இதனால் டி20 அணியில் ஃபிஞ்ச் இடம் கேள்விக்குறியாகியுள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் ஆஸ்திரேலியத் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறுகையில்,“டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் ஃபிஞ்ச் தலைமை தாங்குவது குறித்து எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை. இலங்கைக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்திருக்க அவரும் விரும்பியிருப்பார்.
Trending
ஆனால் முழங்காலில் ஏற்பட்ட காயம் இன்னும் அவரை ஓரளவு பாதித்து வருகிறது. பாகிஸ்தானில் ஒருநாள் தொடரில் ஆடுகளத்தில் அதிக நேரம் இருந்து ரன்கள் எடுப்பார் என நம்புகிறேன். அது அவருடைய திறமையை மீட்டெடுக்க உதவும்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now