
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் அடுத்ததாக 2023ஆம் ஆண்டிற்கான 16வது சீசன் வரும் மார்ச் மாதத்தில் துவங்கி நடைபெற உள்ளது. இதற்காக டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெற இருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அடுத்த சில ஆண்டுகளில் பெங்களூரு அணி 4 கோப்பைகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்து உள்ளார்.
கடந்த 15 வருடங்களாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை. குறிப்பாக அந்த அணிக்காக அதிரடி வீரர்கள் கிறிஸ் கெயில், வாட்சன், கேஎல் ராகுல், ஏபி டி வில்லியர்ஸ் போன்ற பல வீரர்கள் கடந்த காலங்களில் விளையாடியுள்ள போதும் அந்த அணியால் கோப்பை வெல்ல முடியவில்லை. மேலும் அந்த அணியின் நாயகனாக கருதப்படும் விராட் கோலியால் கூட அந்த அணிக்கு தற்போது வரை கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.