
AB de Villiers becomes second overseas player to register 5k runs in IPL (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கி ரசிகர்களுக்கு விருந்தளித்தளித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆர்சிபி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
மேலும் அப்போட்டியில் ஆர்சிபி அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ், 27 ரன்களை கடந்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் ஐந்தாயிரம் ரன்களை கடந்த ஆறாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அதிரடிக்கு துளி அளவு கூட பஞ்சம் இருக்காதா ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் எப்போதும் வானவேடிக்கை காட்டுவது வழக்கம். அதனால் கிரிக்கெட் உலகின் முதல் நிலை பவுலர் பந்து வீசினாலும் பேட்ஸ்மேன்கள் பந்தை பவுண்டரிக்கு விரட்டுவர்.