Advertisement

சர்வதேச போட்டிகளில் கம்பேக் கொடுக்கும் ‘மிஸ்டர் 360’!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ‘மிஸ்டர்

Bharathi Kannan
By Bharathi Kannan May 07, 2021 • 20:55 PM
AB de Villiers is likely to make a comeback ahead of the West Indies T20I series.
AB de Villiers is likely to make a comeback ahead of the West Indies T20I series. (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ‘மிஸ்டர் 360’ ஏபி டி வில்லியர்ஸ். இவர் 15 வருடங்களாக தென்னாபிரிக்க அணி ரசிகர்களை மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களையும் தனது அதிரடி ஆட்டம் மூலம் ரசிக்க வைத்தவர் அவர். ஆனால் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் தனது ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். 

அதன்பின் டி வில்லியர்ஸ் தற்போது வரை பல உலக நாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார். குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் லீக் தொடரில் ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். 37 வயதிலும்  அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஏபி டி வில்லியர்ஸ் மறுபடியும் தென்ஆப்பிரிக்க அணியில் விளையாட போவதாக தென் ஆப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வாரிய இயக்குநர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Trending


இதுகுறித்து பேசிய ஸ்மித், “ஏபி டி வில்லியர்ஸ் எப்பொழுது வேண்டுமானாலும் அணியில் திரும்ப வந்து விளையாடலாம் என்று நாங்கள் சொல்லி இருந்தோம். அதற்கு அவரும் சரி என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் இந்த ஆண்டு இறுதியில் அவரது உடல் பரிசோதனை மேற்கொண்டு, எல்லாம் சரியாக வந்தால் தென் ஆப்பிரிக்க அணிக்கு உலக கோப்பை டி20 தொடரில் விளையாட சம்மதம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இரண்டு டெஸ்ட் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க அணியில், ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்க உள்ளார். டி வில்லியர்ஸ் மட்டுமல்லாமல் கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோரும் இத்தொடரில் விளையாடுவார்கள்.

இவர்களது வருகை தென் ஆப்பிரிக்க அணியின் பலத்தை சற்று அதிகரிக்கும். உலகக் கோப்பை டி20 தொடருக்கு முன்னதாக இந்த போட்டி தென் ஆப்பிரிக்கா அணி வீரர்களுக்கு ஒரு பலப்பரிட்சை யாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு டி வில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement