Advertisement
Advertisement
Advertisement

எஸ்ஏ20 : தூதராக ஏபிடி வில்லியர்ஸ் நியமனம்!

தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக் தொடரின் தூதராக அந்நாட்டின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 01, 2023 • 18:57 PM
எஸ்ஏ20 : தூதராக ஏபிடி வில்லியர்ஸ் நியமனம்!
எஸ்ஏ20 : தூதராக ஏபிடி வில்லியர்ஸ் நியமனம்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடர் போன்று தென் ஆப்பிரிக்காவிலும் டி20 தொடர் 'எஸ்ஏ20 லீக்' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. அதில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே அணிகளை ஒப்பந்தம் செய்துள்ளனர். 

அதன்படி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் கோப்பையை வென்றது.

Trending


இந்நிலையில் இத்தொடரின் 2ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10ஆம் தேதி முடிவடைய உள்ளது. 6 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதன் முதலாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர்கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான தூதராக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement