
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை தொடங்க இருக்கும் நிலையில், இத்தொடர் குறித்த முன்னாள் வீரர்களின் கணிப்புகளும் அதிகரித்துவருகின்றன. அதிலும் குறிப்பாக எந்த அணி பட்டத்தை வெல்லும், எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து தங்கள் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸும் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் பிளேஆஃப்களுக்குச் செல்ல விருப்பமான நான்கு அணிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார். இருப்பினும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸின் பெயர் டிவில்லியர்ஸின் பட்டியலில் இல்லை, இது பல ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்த முறை ஆர்சிபி அணியும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் இந்த முறை அணி சமநிலையில் உள்ளது. அவர்களைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிஅள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.