Advertisement

சிங்கராக மாறிய மிஸ்டர் 360, கமெண்ட் செய்த மேக்ஸ்வெல்!

டி வில்லியர்ஸ் தனது தந்தையின் 70வது பிறந்தநாளுக்காக பாடல் ஒன்றை பாடி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement
ab-de-villiers-sings-a-favourite-song-on-fathers-birthday-after-glenn-maxwell-trolled-him
ab-de-villiers-sings-a-favourite-song-on-fathers-birthday-after-glenn-maxwell-trolled-him (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 02, 2021 • 04:59 PM

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்டர் 360 ஏ பி டிவில்லியர்ஸ். ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து வடிவ போட்டிகளில் அதிரடி காட்டி தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 02, 2021 • 04:59 PM

இவரது ஆட்டத்திற்கு இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.  முக்கியமாக ஐபிஎல் தொடரில் அவர் காட்டிய அதிரடிகள் இன்றளவு டிவில்லியர்ஸை தங்களது கனவு நாயகனாகக் கொண்டுள்ளனர். 

Trending

இந்நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதில் டிவில்லியர்ஸ் தனது தந்தையின் 70வது பிறந்தநாளுக்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார். அவருடன் இணைந்து அவரின் மனைவி டேனியல்லே டிவில்லியர்ஸும் பாடியுள்ளார்.

அப்பதிவில்,“எனது தந்தையின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடலை பாடியுள்ளேன். இந்த பாடல் எனக்கு புதிய அர்த்தத்தை கொடுத்த ஒன்றாகும். கடவுள் எப்போதும் நம்முடன் இருக்கிறார். என்ன நடந்தாலும் அவர் நம்முடன் இருப்பார் என்பதை உணர்த்தும் எனக்கூறியுள்ளார். அதே போல இந்த பாடல் எனது தந்தையை நியாபகப்படுத்துகிறது. அவர் எனக்கு தந்தையாக அமைந்தது எனக்கு பெரும் பாக்கியம்” என பதிவிட்டு காணொளியை இணைத்துள்ளார்.

 

இக் காணொளி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் சுவாரஸ்ய கமெண்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், கடந்த ஆண்டு நீங்கள் பாடியதில் இருந்து இந்த ஆண்டு கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது என வேடிக்கையாக தெரிவித்துள்ளார். 

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஏ பி டிவில்லியர்ஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இணைந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement