
AB de Villiers smashes 46-ball 104 in intra-squad practice match as RCB warm up for UAE leg (Image Source: Google)
14வது சீசன் ஐபிஎல் தொரரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி தொடங்குகின்றன. இதற்குத் தயாராகும் வகையில் ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டு பயிற்சிகளைத் தொடங்கியுள்ளன.
அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பயிற்சியின் ஒரு பகுதியாக ஹர்ஷல் படேல் தலைமையிலும், தேவ்தத் படிக்கல் தலைமையிலும் இரண்டு அணிகளாகப் பிரித்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.
டாஸ் வென்ற ஹர்ஷல் படேல் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணிக்கு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய டி வில்லியர்ஸ் 46 பந்துகளில் 7 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் உள்பட 104 ரன்கள் விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து விளையாடிய முகமது அசாருதீன் 43 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 66 ரன்கள் எடுத்தார்.