
இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் இடம் பெற்று 10 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 6 ஆம் தேதி நடக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஆசிய கோப்பை 20223 கிரிக்கெட் தொடரில் ஆரம்பம் முதலே பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி வந்தது. பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக பாகிஸ்தான் திகழந்தது. ஆனால், அரையிறுதிப் போட்டியில் இலங்கையிடம் கடைசி பந்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானின் லெக்ஸ்பின்னர் ஷதாப் கான், 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதே போன்று இலங்கைக்கு எதிரான போட்டியிலும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஒட்டு மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடி அவர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.