PAK vs BAN: அப்ரார் அஹ்மத், காம்ரன் குலாமை மீண்டும் அணியில் இணைத்தது பிசிபி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி நாளை விளையாடவுள்ள நிலையில், இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் அப்ரார் அஹ்மத், காம்ரன் குலாம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச அணி தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்தும் சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை (ஆகஸ்ட் 30) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே வங்கதேச அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியானடி டிராவில் முடிவடைந்தாலும் வங்கதேச அணியானது தொடரை வென்று சாதனை படைக்கும். அதேசமயம், பாகிஸ்தான் அணி இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும்.
Trending
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மத் மற்றும் டாப் ஆர்டர் வீரர் காம்ரன் குலாம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மத் மற்றும் டாப் ஆர்டர் பேட்டர் காம்ரன் குலாம் ஆகியோரை விடுவிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. மேலும் இவர்கள் இருவரும் வங்கதேச ஏ அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியிலும் சேர்ந்து பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வந்தனர்.
இந்நிலையில் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இவர்கள் இருவரையும் மீண்டும் அணியில் இணைத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்துள்ள பாகிஸ்தான் அணியானது அதிலிருந்து மீண்டுவருவதுடன், அதற்கான பதிலடியைக் கொடுக்கும் முனைப்பில் உள்ள நிலையில், இவர்கள் இருவரும் அணியில் இணைந்துள்ளது கூடுதல் சாதகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கே), சவுத் ஷகீல், அமீர் ஜமால் (உடற்தகுதிக்கு உட்பட்டு), அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், காம்ரன் குலாம், குர்ரம் ஷாஜாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி
Win Big, Make Your Cricket Tales Now