
நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இங்கிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக இந்திய சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவை ஒப்பந்தம் செய்திருக்கிறது.
2010 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் கேதார் ஜாதவ் 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 7.80 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டு விளையாடினார். இதற்கு அடுத்து 2021 ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் கேதார் ஜாதவ் தனது பெயரை ஒரு கோடி ரூபாய்க்கு பதிவு செய்திருந்தார். ஆனால் அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வில்லிக்குப் பதிலாக தன்னை எப்படி ஒப்பந்தம் செய்தது என்பது குறித்து கேதார் ஜாதவ் பேசியிருக்கிறார்.