
Abu Dhabi T10: Explosive Gayle and Salt propel Abu Dhabi to win against Chennai (Image Source: Google)
டி10 லீக் தொடரில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி, சென்னை பிரேவ்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற டீம் அபுதாபி முதலில் பந்துவீசுவதாக முடிவுசெய்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை பிரேவ்ஸ் அணிக்கு முகமது ஷசாத் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். 30 பந்துகளை எதிர்கொண்ட ஷசாத் 53 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை மட்டுமே சேர்த்தது. அபுதாபி அணி தரப்பில் கேப்டன் லிவிங்ஸ்டோன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.