
அபுதாபி டி10 லீக் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் டீம் அபுதாபி மற்றும் தி சென்னை பிரேவ்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அபுதாபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க வீரர் ஜேசன் ராய் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் களமிறங்கிய கோப் ஹெர்ஃப்ட் 14, முன்ஸி 2, ஸ்டீவி எஸ்கின்ஸி 4, கேப்டன் சரித் அசலங்கா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேசன் ராய் 39 பந்துகளில் 6 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசி 84 ரன்களைச் சேர்த்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன்மூலம் சென்னை பிரேவ்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களைச் சேர்த்தது.