Advertisement

சூப்பர் 10 கிரிக்கெட் தொடரை தொடங்கிவைத்த கிறிஸ் கெயில், கிச்சா சுதீப்!

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கார்ப்ரேட் பணியாளர்கள் இணைந்து விளையாடும் டி10 கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில், நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

Advertisement
Actor Kichcha Sudeep, Cricketer Chris Gayle Launch First Edition Of Super 10 League
Actor Kichcha Sudeep, Cricketer Chris Gayle Launch First Edition Of Super 10 League (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 15, 2022 • 08:19 PM

பிரபல இந்திய திரை நட்சத்திரங்கள், சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து விளையாடும், சூப்பர் 10 லீக்கின் முதல் பதிப்பை, இந்திய முன்னணி  நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 15, 2022 • 08:19 PM

இந்தப் போட்டியில்  இந்திய திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து 10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்பார்கள். இந்த குறுகிய ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி மிகச்சிறந்த பொழுதுபோக்கை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிகள் டிசம்பர் 2022இல் பெங்களூருவில் 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

Trending

இந்த லீக் போட்டிகளில் தமிழ், பாலிவுட், கன்னடம் மற்றும் தெலுங்கு துறையைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடவுள்ளனர். 

இப்போட்டி குறித்து பேசிய கிறிஸ் கெயில் கூறுகையில், “உலகம் முழுவதும் இருக்கும் எனக்கு பிடித்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய திரைத்துறை பிரபலங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இந்தப் போட்டி ‘டி10’ வடிவில் அமைக்கப்பட்டிருப்பதால் மிகப்பெரிய பொழுதுபோக்கை அளிக்குமென்பது உறுதி; டிசம்பர் எப்போது வருமென ஆவலாக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கிச்சா சுதீப் கூறுகையில், “சூப்பர் டி10 லீக்  கிரிக்கெட் என்பது, திரைத்துறை மற்றும் கார்ப்பரேட் துறையில் உள்ள நண்பர்களுடனும், கிரிக்கெட் வீரர்களுடனும் இணைந்து விளையாடுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த விளையாட்டுகள் எங்களுள் உள்ள மற்றுமொரு பக்கத்தை எங்கள் ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தும். இது மிகப்பெரிய பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கும்” என்று கூறியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement