
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தனது ஆல் டைம் ஐபிஎல் சாம்பியன்ஸ் லெவன் அணியை இன்று தேர்ந்தெடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் இந்த அணியில் ஐபிஎல் பட்டங்களை வென்ற வீரர்களைக் கொண்டு மட்டுமே லெவனைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்திருக்கும் இந்திய அணியில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸை சேர்ந்த 5 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
அதன்படி அவர் மும்பை அணிக்காக ஐந்து முறை சாம்பியன்ஸ் பட்டத்தை வென்ற கேப்டன் ரோஹித் சர்மா, மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், வெஸ்ட் இண்டீஸின் அதிரடி ஆல் ரவுண்டர் கீரோன் பொல்லார்ட், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் இலங்காஇ அணியின் முன்னால் ஜாம்பவான் லசித் மலிங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.