சூர்யகுமார் யாதவுக்கு பந்து வீசுவது கடினம் - ஆடம் மில்னே!
சூர்யகுமார் யாதவுக்கு பந்து வீசுவது கடினம் என நியூசிலாந்து பந்து வீச்சாளர் ஆடம் மில்னே தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற மவுன்ட் மாங்கானுயிவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
Trending
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து இந்திய அணி இலக்கை நோக்கி விளையாடிய போது ஆட்டத்தின் குறுக்கே மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டத்து. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் டக்வொர்த் முறைப்படி ஒரே ஸ்கோர் அடித்திருந்ததால் ஆட்டம் டை ஆனது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்த தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில்,சூர்யகுமார் யாதவுக்கு பந்து வீசுவது கடினம் என நியூசிலாந்து பந்து வீச்சாளர் ஆடம் மில்னே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் ,“சூர்யகுமார் யாதவுக்கு பந்து வீசுவது கடினம், ஏபி டிவில்லியர்ஸ் போல் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை அடிக்கும் திறன் படைத்தவர், நாம் அவரி இந்த பந்து வீச போகிறோன் என நினைக்க வைத்து வேறு விதமான வீச வேண்டும்.
நான் மும்பை அணியில் இருந்த போது நிறைய பார்த்துள்ளேன் அப்போது அவர் சிறந்த வீரராக இருந்தார். ஆனால் இப்போது அவர் அதையும் தாண்டி சிறந்த நிலைக்கு சென்றுள்ளார். அவருடைய நம்பிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. மேலும், அவரது சில ஷாட்டுகள் மிகவும் கடினமானது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now