
அஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் வங்கதேச அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த்து. இப்போட்டிக்கான வங்கதேச அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ காயம் காரணமாக விளையாடாத நிலையில், மெஹிதி ஹசன் மிராஸ் கேப்டனாக செயல்பட்டார். இதையடுத்து பேட்டிங் செய்ய காளமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - சௌமியா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சௌமிய சர்க்கார் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து தன்ஸித் ஹசன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸகிர் ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
இதனால் வங்கதேச அணி 72 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த மெஹிதி ஹசன் - மஹ்முதுல்லா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். அதன்பின் இருவரும் இணைந்து தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசியதுடன் தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 145 ரன்களை எட்டியது. பின்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் 66 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.