
AFG vs NED, 1st ODI: Afghanistan beat Netherlands by 36 runs (Image Source: Google)
ஆஃப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி தோஹாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி ரஹ்மத் ஷா, ஹஸ்மதுல்ல ஷாஹிதி ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஷாஹித் 73 ரன்களையும், ரஹ்மத் ஷா 70 ரன்களையும் சேர்த்தனர். நெதர்லாந்து தரப்பில் பிராண்டன் குளொவர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.