AFG vs PAK, 2nd ODI: ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடி சதம்; பாகிஸ்தானுக்கு 301 ரன்கள் டார்கெட்!
பாகிஸ்தானிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 301 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன. இதையடுத்து ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக ஆசிய அணிகள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.
அதன் ஒருபகுதியாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
Trending
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹமந்தட்டாவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இப்ராஹிம் சத்ரான் அரைசதம் கடந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6 பவுண்டரி 2 சிக்சர்கள் என 80 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 227 ரன்களைக் குவித்து அசத்தினர். அதன்பின் களமிறங்கிய முகமது நபி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, தொடக்க வீரராக களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 14 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 151 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவறினர்.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனையடுத்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now