
AFG vs PAK: afghanistan-announce-17-man-squad-for-pakistan-odis (Image Source: Google)
வருகிற செப்டம்பர் மாதம் ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான 17 பேர் அடங்கிய அணியை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஹஸ்மதுல்லா ஷாஹித் தலைமையிலான இந்த அணியில் செடிகுல்லா அடல், ஷாஹிதுல்லா கமல், அப்துல் ரஹ்மான், ஃபஸல்ஹாக் ஃபாரூக்கி, நூர் அஹ்மத் ஆகிய ஐந்து அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் முன்னாள் கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கான், குலாபுதின் நைப், உஸ்மான் கானி ஆகியோருக்கு பதிலாக இப்ராஹிம் சத்ரான், இக்ரம் அலிகில் ஆகியோருக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்படுள்ளது.