Advertisement
Advertisement
Advertisement

AFG vs PAK: 18 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநால் தொடரில் விளையாடும் 18 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 06, 2023 • 22:24 PM
AFG vs PAK:  18 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
AFG vs PAK: 18 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு! (Image Source: Google)
Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன. இதையடுத்து ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக ஆசிய அணிகள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. 

அதன் ஒருபகுதியாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடர் ஆகஸ்ட் 22ஆம் தேதி இலங்கையில் தொடங்கவுள்ளது. 

Trending


இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான இந்த அணியில் ரஷித் கான், முகமது நபி, நூர் அஹ்மத், ரஹ்மனுல்லா குர்பாஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 

ஆஃப்கானிஸ்தான் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (சி), ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகில், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபரூக்கி, அப்துல் ரஹ்மான், முகமது சலீம் சஃபி மற்றும் வஃபாதர் மொமந்த்.

ஆஃப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் ஆட்டவணை

  • ஆகஸ்ட் 22: முதல் ஒருநாள் போட்டி, ஹம்பாந்தோட்டை
  • ஆகஸ்ட் 24: இரண்டாவது ஒருநாள் போட்டி, ஹம்பாந்தோட்டை
  • ஆகஸ்ட் 26: மூன்றாவது ஒருநாள் போட்டி, கொழும்பு.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement