
Afghan Cricket Star Rashid Khan Agonises Over Family's Safety Says Kevin Pietersen (Image Source: Google)
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து வெளியேறும் நோக்குடன் ஆப்கானியர்களும், வெளிநாட்டினரும் காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் டிரண்ட் ராக்கெட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தனது குடும்பம் உடனடியாக வெளியேற முடியாத சூழல் நிலவுவதால் ரஷித் கான் கவலையில் உள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.