
Afghanistan Appoints Ex-Pakistan Pacer Umar Gul As Bowling Coach (Image Source: Google)
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கிரஹாம் தோர்பே நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங் பயிற்சியாளராக பாகிஸ்தானின் முன்னாள் லெஜண்ட் பேட்ஸ்மேனான யூனிஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்போது பவுலிங் பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஆடவுள்ள தொடரிலிருந்து ஆஃப்கானிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பொறுப்பை உமர் குல் ஏற்கவுள்ளார்.
உமர் குல் பாகிஸ்தான் அணிக்காக 47 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 163 விக்கெட்டுகளையும், 130 ஒருநாள் போட்டிகளில் ஆடி 179 விக்கெட்டுகளையும், 60 டி20 போட்டிகளில் ஆடி 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் உமர் குல்.