ஃபீல்டிங்கில் சொதப்பி கேட்ச்களை தவற விட்டதே தோல்விக்கு காரணம் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஃபீல்டிங்கில் சொதப்பி கேட்ச்களை தவற விட்டதும் டெத் ஓவர்களில் ரன்களை கொடுத்ததும் தோல்வியை கொடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடி ஆப்கானிஸ்தான் அணி 139 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது.
இந்த வெற்றி நியூசிலாந்து அணிக்கு நான்காவது வெற்றியாகும். இதன் மூலம் இந்திய அணியை கீழே இறக்கி நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்று இருக்கிறது. மேலும் அந்த அணியின் ரன் ரேட் இந்திய அணியை விட மிகச் சிறப்பாக இருக்கிறது.
Trending
இந்நிலையில் ஃபீல்டிங்கில் சொதப்பி கேட்ச்களை தவற விட்டதும் டெத் ஓவர்களில் ரன்களை கொடுத்ததும் தோல்வியை கொடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் சேப்பாக்கம் பிட்ச்சை சரியாக கணிக்க முடியவில்லை என்று கூறியுள்ள அவர் அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் போராடி கம்பேக் கொடுப்போம் என்று போட்டியின் முடிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்தளவில் நீங்கள் அது போன்ற கேட்ச்களை பிடித்தாக வேண்டும். எங்களுடைய ஃபீல்டிங் மோசமாக இருந்தது. அதனால் நாங்கள் சற்று வீழ்ச்சியை சந்தித்தோம். அதே போல கடைசி 6 ஓவர்களில் நியூசிலாந்து அணி நிறைய ரன்கள் குவித்தது. குறிப்பாக 40 ஓவர்களுக்கு முன்பாக நாங்கள் சில கேட்ச்களை தவற விட்டோம். அதனால் எதிரணி பேட்ஸ்மேன்கள் செட்டிலாவதை தடுக்க நினைத்தும் எங்களால் முடியவில்லை.
மேலும் டாஸ் வீசும் போது சொன்னதைப் போலவே பிட்ச்சை 100% உங்களால் கணிக்க முடியாது. இன்று அது மெதுவாக இருந்தது. இப்போட்டியில் நாங்கள் பவுலிங் சிறப்பாக செய்தும் ஃபீல்டிங் கவலையையும் வலியையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் எப்படி முன்னேறலாம் என்பதை விவாதித்து அடுத்து வரும் போட்டிகளில் நாங்கள் வலுவாக கம்பேக் கொடுப்போம்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now