
Afghanistan need more big-time matches to be merrier, says Rashid Khan (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது சூப்பர் 12-சுற்றின் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை ? என்பது தெரியவரும்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் 170 முதல் 180 ரன்கள் வரை துரத்தி இருப்போம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இந்திய அணி கூடுதலாக 30 ரன்களை அடித்து விட்டதால் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது. மேலும் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்ததால் எங்களால் அவர்களை தகர்க்க முடியாமல் போனது.