பிபிஎல் 2021: பிரிஸ்பேன் அணியில் மீண்டும் முஜீப் உர் ரஹ்மான்!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஆஃப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் மீண்டும் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார்.

ஆஃப்கானிஸ்தான் அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான். இவர் ஆஃப்கானிஸ்தான் அணிக்காக இதுநாள் வரை ஒரு டெஸ்ட், 43 ஒருநாள், 19 டி20 போட்டிகளில் விளையாடி, 96 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காகவும் இவர் விளையாடி வந்தார். இந்நிலையில் நடப்பு சீசனுக்கான பிரிஸ்பேன் ஹீட் அணியில் முஜீப் உர் ரஹ்மான் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக கடந்த மூன்று சீசன்களாக விளையாடும் முஜீப் உர் ரஹ்மான், 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதன் காரணமாகவே நான்காவது சீசனனாக அவரை பிரிஸ்பேன் ஹீட் அணி ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now