
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தயாராகி வருகிறது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இத்தொடருக்கான வீரர்கள் ஏலமும் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றது. மேற்கொண்டு எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசனானது எதிவரும் ஜனவரி 09ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது பிப்ரவரி 08ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனால் நடப்பு எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் மும்பை இந்தியன்ஸ் உரிமையாளரின் அணியான எம்ஐ கேப்டவுன் அணி இந்த தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடப்பு சீசன் எஸ்ஏ20 லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.