
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் இந்த ஆண்டு டிசம்பரில் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி வரையில் விளையாட உள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணையும் இன்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 9ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுது இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் முறையாக பாக்ஸிங் டே மற்றும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 26ஆம் தேதியும், புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது ஜனவரி 2ஆம் தேதியும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோதிய நிலையில், அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.