
ஆசிய கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் vs இலங்கை - சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவது யார்? (Image Source: Cricketnmore)
SL vs AFG Match 11, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறு முனைப்புடன் இந்த போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி தங்களுடைய வெற்றியைப் பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SL vs AFG: Match Details
- மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs இலங்கை
- இடம் - ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம், அபுதாபி
- நேரம்- செப்டம்பர் 18, மாலை 8 மணி (இந்திய நேரப்படி)