Advertisement

பூஜ்ஜியமா அல்லது இரண்டு புள்ளிகளா? -  ஆஸ்திரேலியாவை நோக்கி நவீன் உல் ஹக் கேள்வி!

ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை போட்டியில் அவர்கள் எங்களுடன் விளையாடுவார்களா? மாட்டார்களா? என்பதை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 05, 2023 • 15:23 PM
பூஜ்ஜியமா அல்லது இரண்டு புள்ளிகளா? -  ஆஸ்திரேலியாவை நோக்கி நவீன் உல் ஹக் கேள்வி!
பூஜ்ஜியமா அல்லது இரண்டு புள்ளிகளா? -  ஆஸ்திரேலியாவை நோக்கி நவீன் உல் ஹக் கேள்வி! (Image Source: Google)
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணி ஏறக்குறைய 7 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்று பத்து புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணி 8 புள்ளிகள் உடனும் உள்ளது.

ஐந்தாவது இடத்தில் , பாகிஸ்தான் அணி 8 புள்ளிகள் உடனும் உள்ளன. இந்த நிலையில் ஆறாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகள் உடன் உள்ளது. தற்போது ஆப்கானிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் வரும் ஏழாம் தேதி மோத உள்ளனர். இந்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவு இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Trending


இந்த நிலையில் தான் ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக், ஒரு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது ஆஃப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் அரசு ஆஃப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட்டுக்கு தடை விதித்திருக்கிறது. இதனை காரணம் காட்டி கடந்த ஜனவரி மாதம் ஆஃப்கானிஸ்தானுடன் தாங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டோம் என ஆஸ்திரேலிய அணி அறிவித்து.

அந்த தொடரை ரத்தும் செய்தது. இந்த நிலையில் இதனை தற்போது சுட்டிக்காட்டி உள்ள ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக், இருதரப்பு தொடரை சில காரணத்தைக் காட்டி ஆஸ்திரேலியா விளையாட மாட்டேன் என அறிவித்தது. தற்போது உலகக் கோப்பை போட்டியில் அவர்கள் எங்களுடன் விளையாடுவார்களா? மாட்டார்களா? என்பதை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். பூஜ்ஜியமா அல்லது இரண்டு புள்ளிகளா என அவர் கேள்வி கேட்டுள்ளார். 

இது தற்போது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தாலிபான் ஆட்சி தான் இன்னும் ஆஃப்கானிஸ்தானில் நிலவி வருகிறது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா விளையாடுமா இல்லை விளையாடாதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அப்படி ஆஃப்கானிஸ்தான் உடன் ஆஸ்திரேலியா விளையாடவில்லை என்றால் இரண்டு புள்ளிகள் ஆஃப்கானிஸ்தானுக்கு கிடைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 1996 உலககோப்பையில் இலங்கைக்கு சென்று விளையாட மாட்டோம் என்று ஆஸ்திரேலியா அறிவித்து 2 புள்ளிகளை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement