
After 3 decades, Sunil Gavaskar returns unused Mumbai plot (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் உலகக் கோப்பை வென்ற அணியில் விளையாடியவர் சுனில் கவாஸ்கர். 72 வயதான அவர் 1971 முதல் 1987 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார்.
இதுவரை 125 டெஸ்ட் போட்டிகளில் 10,122 ரன்களும், 108 ஒருநாள் போட்டிகளில் 3092 ரன்களும் எடுத்துள்ளார் அவர். ஓய்வுக்கு பிறகு போட்டிகளை வர்ணனை செய்வது, கிரிக்கெட் தொடர்பாக எழுதுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் 33 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிரா அரசு அவருக்கு மும்பை நகரின் பாந்த்ரா பகுதியில் இருபதாயிரம் சதுர அடி நிலத்தை வழங்கியது. அந்த இடத்தில் கிரிக்கெட் அகாடமி நிறுவும் நோக்கத்தில் மாநில அரசு அவருக்கு நிலத்தை வழங்கியிருந்தது. ஆனால் ஆண்டுகள் கடந்தும் அகாடமியை கவாஸ்கர் நிறுவவில்லை. அந்த நிலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.