
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 404 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 258 ரன்களும் எடுத்து டிக்ளெர் செய்தது. இதனால் 513 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் சரிவில் இருந்த இந்திய அணியை சட்டேஷ்வர் புஜாரா 90 மற்றும் 102 ரன்களை அடித்து காப்பாற்றினார். ஆனால் புஜாராவை போலவே சுப்மன் கில்லும் 2ஆவது இன்னிங்ஸில் சதமடித்து கடினமான இலக்கை நிர்ணயிக்க உதவியிருந்தார். 130 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 110 ரன்களை குவித்தார்.
இந்நிலையில் இவர் தான் இந்தியாவின் அடுத்த விராட் கோலி என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சுப்மன் கில் தனக்கு கிடைத்த சில தவறவிட்டார். ஆனால் தற்போது கம்பேக் கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு கிளாசி ப்ளேயர் ஆகும். எனவே விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியில் ஜொலிக்கப்போவது சுப்மன் கில் தான் ஆகும். அவர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் அசால்ட்டாக விளையாடக்கூடிய விரர்.