-mdl.jpg)
ஐசிசி உலக கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி நடப்பு தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட் களையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக மஹ்முதுலா 56 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஸமான் 81 ர்னகளையும், அப்துல்லா ஷஃபிக் 68 ரன்களையும் விளாசி வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 32.3 ஓவரில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. மேலும் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த ஃபகர் ஸமான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ஃபகர் ஸமான், “ஆசிய கோப்பை தொடருக்கு பின்னர் நான் என்னுடைய பேட்டிங்கில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டேன். இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் நான் இடம்பெற்று என்னுடைய சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதை எதிர்நோக்கி காத்திருந்தேன்.