
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. நாளைய இந்த இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேவேளையில் இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக ஏற்கனவே அஹ்மதாபாத் சென்றடைந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் வெற்றியாளர்களை தீர்மானிக்கப்போகும் பல முக்கிய விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளன.
அந்த வகையில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்கவுள்ள இந்த போட்டிக்கான மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த அஹ்மதாபாத் மைதானத்தின் பராமரிப்பாளர் அளித்துள்ள பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.