இத்தொடரிலேயே எனது சாதனை உடைக்கப்படும் - ஐடன் மார்க்ரம்!
பெரும்பாலான பிட்ச்கள் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் நிலையில் பேட்ஸ்மேன்கள் தம்முடைய சாதனையை இத்தொடரிலேயே உடைத்தால் ஆச்சரியப்பட போவதில்லை என்று ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இலங்கையை 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென் ஆப்பிரிக்கா பெரிய வெற்றியை பெற்றது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் இலங்கை பவுலர்களை அடித்து நொறுக்கி 428/5 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 100, வேன் டெர் டுஷன் 108, ஐடன் மார்க்கெம் 106 என 3 வீரர்கள் அதிரடியான சதமடித்து பெரிய ரன்கள் குவித்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 429 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிசாங்கா 0, குசால் பெரேரா 7, சமரவிக்ரமா 23 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த இடங்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.
Trending
அதனால் குசால் மெண்டிஸ் 76, அசலங்கா 79, கேப்டன் சனாகா 68 ரன்கள் எடுத்தும் 44.5 ஓவரில் இலங்கையை 326 ரன்கள் கட்டுப்படுத்தி வென்ற தெனாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெராலட் கோட்சி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக இந்த போட்டியில் டீ காக், டுஷன் ஆகியோரை விட மிடில் ஆர்டரில் களமிறங்கி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரம் 14 பவுண்டரி 3 சிக்சருடன் 106 ரன்கள் குவித்தார்.
அதிலும் 49 ரன்களில் 100 ரன்கள் தொட்ட அவர் உலகக் கோப்பை வரலாற்றில் வேகமாக சதமடித்த வீரர் என்ற அயர்லாந்து வீரர் கெவின் ஓ’ பிரையனின் (2011இல் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில்) சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார். இந்நிலையில் இதே உலகக் கோப்பையில் தம்முடைய உலக சாதனையை எந்த பேட்ஸ்மேன்கள் வேண்டுமானாலும் உடைக்கலாம் என்று ஐடன் மார்க்ரம் வெளிப்படையாக பேசியுள்ளார்.
குறிப்பாக இப்போதெல்லாம் பெரும்பாலான பிட்ச்கள் பேட்டிங்க்கு இருக்கும் நிலையில் வகை வகையாக பவுலர்களை அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன்கள் தம்முடைய சாதனையை இத்தொடரிலேயே உடைத்தால் ஆச்சரியப்பட போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த காலத்தில் பேட்ஸ்மேன்கள் விளையாடும் விதத்தை வைத்து இதே உலகக்கோப்பையில் என்னுடைய சாதனை முறியடிக்கப்பட்டால் அதற்காக நீங்கள் ஆச்சரியப்படக்கூடாது.
இருப்பினும் தற்போதைக்கு உலகக்கோப்பையை வெல்ல ஒரு அணியாக நாங்கள் கியரை மாற்றியுள்ளது நல்ல உணர்வை கொடுக்கிறது. மேலும் நவீன கிரிக்கெட்டில் நீங்கள் சிறந்து விளங்குவதற்கு ஒரு பேட்ஸ்மேனாக புதிய பரிணாமத்தை காண வேண்டும். குறிப்பாக உடைய ஏ திட்டத்தில் இல்லாதவற்றை நீங்கள் சில நேரங்களில் பின்பற்ற வேண்டும். மேலும் பொதுவாக உலகக்கோப்பையில் எங்களை மெதுவாக தொடங்குபவர்கள் என்று அனைவரும் நினைக்கிறார்கள். அதை மாற்றும் வகையில் இந்த போட்டியில் நாங்கள் அதிரடியாக விளையாடினோம்” என்று கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now