
இந்திய கிரிக்கெட்டின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவைச்சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்க, அவரால் இந்திய அணியில் விளையாட முடியாமல் போனது. இவரது இடத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு அனுபவ வீரரான ரஹானேவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
18 மாதங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்குள் திரும்பி வந்த ரஹானே மிகச் சிறப்பாக விளையாடி நெருக்கடியான நேரத்தில் 89 ரன்கள் எடுத்து தன்னை நிரூபித்து இருக்கிறார். இந்நிலையில், ரஹானே தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இது குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், “ரஹானே தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒருவரால் அவ்வளவுதான் செய்ய முடியும். கே எல் ராகுலும், ஸ்ரேயாஸ் ஐயரும் இந்திய அணிக்குள் திரும்பி வருவதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இரண்டு ஆட்டங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன்.