கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து விலகிய அஜிங்கியா ரஹானே!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் லிசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிவரும் அஜிங்கியா ரஹானே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுவந்த இவர், சமீப கலமாக மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதன் காரணமாக அவர், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் லிசெஸ்டர்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார்.
இதில் ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே 10 இன்னிங்ஸில் 42 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 378 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அரையிறுதிச்சுற்று வரை முன்னேறிய லிசெஸ்டர்ஷையர் அணியானது, அரையிறுதியில் சொமர்செட் அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தது.
Trending
இருப்பினும் ஒருநாள் தொடருக்கு பிறகு கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் இரண்டில் லிசெஸ்டர்ஷையர் அணிக்காக அஜிங்கியா ரஹானே விளையாடி வந்தார். இத்தொடரில் லிசெஸ்டர்ஷைர் அணியானது விளையாடிய 12 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வி மற்றும் 9 போட்டிகளை டிராவில் முடித்து புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனையடுத்து நடப்பு சீசனின் கடைசி இரண்டு போட்டிகளில் லிசெஸ்டர்ஷைர் அணியானது விளையாடவுள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு சீசன் கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து அஜிங்கியா ரஹானே விலகியுள்ளதாக லிசெஸ்டர்ஷைர் அணி அறிவித்துள்ளது. அதன்படி போட்டிக்கு நடுவே காயத்தால் அசௌகரியமாக உணர்ந்த ரஹானேவை கவுண்டி மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையின் முடிவிக்கு பிறகு அவர் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இதுகுறித்து பேசிய ரஹானே, “லீசெஸ்டர்ஷையருடன் எனது நேரத்தை நான் மிகவும் விரும்பினேன். நாங்கள் சில அருமையான கிரிக்கெட்டை விளையாடினோம், அடுத்த சீசனுக்கு அணிக்கு நிறைய நம்பிக்கைக்குரிய அறிகுறிகள் உள்ளன. எனது சக வீரர்களுடன் விளையாடுவதையும், எனது ஆட்டத்தை மேம்படுத்த பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதையும் நான் மிகவும் ரசித்துள்ளேன். எதிர்காலத்தில் மீண்டும் இதே அணிக்கு திரும்ப விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now