அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஆகாஷ் தீப் - வைரலாகும் காணொளி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். அதன்படி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்களுக்கும், ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஹ்சன் மஹ்மூத் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Trending
அதன்பின் ரிஷப் பந்த் 39 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 ரன்களிலும், கேஎல் ராகுல் 19 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரவீந்திர ஜடேஜா 86 ரன்களில் விக்கெட்டை இழக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் ஷாத்மன் இஸ்லாம் 2 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து ஸாகிர் ஹசன் 3 ரன்களிலும், அடுத்து வந்த மொமினுல் ஹக் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 20 ரன்களிலும், முஷ்ஃபீகூர் ரஹீம் 8 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் வங்கதேச அணி தற்போது வரை 5 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களைச் சேர்த்துள்ளது. மேலும் களத்தில் அணியின் சீனியர் வீரர்களான ஷாகிப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் உள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் ஆகாஷ் தீப் சிங் தனது இரண்டாவது ஓவரிலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
What a sight for a fast bowler!
— BCCI (@BCCI) September 20, 2024
Akash Deep rattles stumps twice, giving #TeamIndia a great start into the second innings.
Watch the two wickets here#INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/TR8VznWlKU
Also Read: Funding To Save Test Cricket
அதன்படி இன்னிங்ஸின் 9ஆவது ஓவரை வீசிய ஆகாஷ் தீப் அந்த ஓவரின் முதல் பந்தில் 3 ரன்களை எடுத்திருந்த ஸாகிர் ஹசனை க்ளீன் போல்டாக்கி வழியனுப்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொமினுல் ஹக்கும் முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் ஆகாஷ் தீப் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now