
தென் இந்திய கிரிக்கெட்டின் தந்தை என போற்றப்படுபவர் புஜ்ஜிபாபு. அவரின் நினைவாக கடந்த 1907ஆம் ஆண்டு முதல் புஜ்ஜிபாபு கிரிக்கெட் கோப்பை தொடரானது கடந்த 2017ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டு வந்தது. அதன்பின் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் இத்தொடர் மோற்கொண்டு நடத்தாமல் கைவிடப்பட்ட நிலையில், பல்வேறு முன்னாள் வீரர்களின் கோரிக்கை ஏற்று கடந்த ஆண்டு மீண்டும் இத்தொடரானது நடைபெற்றது. இந்நிலையில் இத்தொடரின் அடுத்த சீசனானது தற்போது தொடங்கவுள்ளது.
அதிலும் ரஞ்சி கோப்பை தொடரை பின்பற்றி நடத்தப்படும் இத்தொடரின் மூலம் வீரர்கள் தங்கள் உள்ளூர் தொடர்களுக்கு தயராகவும் இத்தொடர் வழிவகை செய்வதாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் தற்சமயம் 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் போட்டி அட்டவணையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதியுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இத்தொடரின் முதல் சுற்றானது ஆக்ஸர் 15 முதல் 18ஆம் தேதி வரையிலும், இரண்டாவது சுற்று ஆக்ஸட் 21 முதல் 24ஆம் தேதி வரையிலும், மூன்றாவது சுற்று ஆகஸ்ட் 27 முதல் 30ஆம் தேதி வரையிலும், அரையிறுதி போட்டிகள் செப்டம்பர் 2 முதல் 5 வரையிலும், இறுதிப்போட்டியானது செப்டம்பர் 8ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.