Advertisement

வங்கதேச அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ஆலன் டொனால்ட்!

வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து ஆலன் டொனால்ட் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வங்கதேச அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ஆலன் டொனால்ட்!
வங்கதேச அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ஆலன் டொனால்ட்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 10, 2023 • 02:02 PM

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி 8 போட்டிகளில் 2 வெற்றி 6 தோல்விகளை பதிவு செய்து லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. ஆனால் அந்த அணி 2ஆவது வெற்றியை பதிவு செய்த விதம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சிலோ மேத்யூஸ் பேட்டிங் செய்வதற்காக களத்திற்கு வந்த போது ஹெல்மெட் பழுதாக இருந்ததை பார்த்ததால் மாற்றுவதற்கு முயற்சித்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 10, 2023 • 02:02 PM

அப்போது அவர் வேண்டுமென்றே காலம் தாமதம் செய்வதாக தெரிவித்த வங்கதேச அணியினர் தங்களுக்கு அவுட் கொடுக்க வேண்டும் என்று நடுவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அதை சோதித்த நடுவர்கள் முந்தைய பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்ற பின் அடுத்த பேட்ஸ்மேன் அதற்கடுத்த 2 நிமிடத்திற்குள் வந்து பந்தை எதிர்கொள்ளவில்லை என்ற விதிமுறையை மீறியதால் மேத்யூஸ் அவுட் என்று அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

Trending

அதனால் ஏமாற்றமடைந்த மேத்யூஸ் வங்கதேசம் மற்றும் ஷாகிப் மீதான மரியாதை போய் விட்டதாக விமர்சித்ததுடன் தாம் 2 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்த வீடியோ ஆதாரத்தை ஐசிசியிடம் சமர்ப்பித்து நியாயமும் கேட்டார். அந்த நிலையில் ஷாகிப் அல் ஹசன் செய்த இந்த நிகழ்வை பெவிலியனிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் களத்திற்கு சென்று “போதும் நிறுத்துங்கள் என்று திட்டலாம்” என நினைத்ததாக வங்கதேச அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் வெளிப்படையாக விமர்சித்தார்.

இதை சொல்வதற்காக அனைவரும் தம்மை பழைய காலத்து ஆள் என்று நினைத்தாலும் இது போன்ற மோசமான நிகழ்வுகளை கிரிக்கெட்டில் அனுமதிக்க கூடாது என்றும் அவர் கூறியிருந்தார். அந்த வகையில் தன்னுடைய அணியின் கேப்டனையே வங்கதேச பயிற்சியாளர் வெளிப்படையாக விமர்சித்தது அந்நாட்டு வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் வங்கதேச அணியின் பவுலிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக ஆலன் டொனால்ட் முடிவு செய்துள்ளார். குறிப்பாக இந்த உலகக்கோப்பையுடன் அப்பதிவியிலிருந்து விலகுவதாக வங்கதேச வாரியத்திடம் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

இது பற்றி வங்கதேச வாரிய அதிகாரி கூறியுள்ளது பின்வருமாறு. “ஆம் டொனால்ட் இந்த உலகக் கோப்பைக்கு பின் தொடர விரும்பவில்லை என்று அணி மீட்டிங்கில் எங்களிடம் தெரிவித்தார்” என்று கூறினார். இதைப் பற்றி டொனால்ட் அவர்களிடம் கேட்ட போது, “நான் வெளிப்படையாக விமர்சித்ததற்காக வங்கதேச வாரியம் விளக்கம் கேட்டால் பதிலளிக்க தயார். என்னை பொறுத்த வரை இதற்கான விளக்கம் செய்திகளில் வந்து விட்டது” என்று கூறினார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement