
இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி மூனறாவது போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகின்றனர்.
இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி நாளை (ஜனவரி 31) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன்.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சோபிக்க தவறியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிலும் இருவரும் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான பந்துகளுக்கு தங்கள் விக்கெட்டுகளை இழப்பது ரசிகர்களை அதிருப்தியடை செய்துள்ளது. இந்நிலையில் அவர்களுடைய தடுமாற்றத்திற்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விளக்கியுள்ளார்.