
Ambati Rayudu may not play for CSK against Hyderabad today (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்தளித்து வருகிறது. இதில் இன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது.
ஆர்சிபி அணிக்கெதிரான கடந்த போட்டியில் சிஎஸ்கே வின் மொயீன் அலி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக டுவைன் பிராவோ களமிறங்கினார்.
இந்த நிலையில் சிஎஸ்கேவின் இன்னொரு நட்சத்திர வீரர் அம்பதி ராயுடு காயமடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் அவரால் விளையாட முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியின் போது ராயுடு காயமடைந்தார்.