
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் 2018 ஆம் ஆண்டில் இருந்து பயணித்து வரும் அம்பத்தி ராயுடு, 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் உடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிசிசிஐ விதிமுறைப்படி, உள்ளூர் கிரிக்கெட் உட்பட அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறும் இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதி உண்டு.
ஓய்வு பெறுவதற்கு முன்பு பிசிசிஐ உடன் ஒப்பந்தம் இருப்பதால் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாட முடியாது என்று விதிமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அமெரிக்காவில் நடைபெற உள்ள மேஜர் லீக் கிரிக்கெட் டி20 லீகில் டெக்ஸாஸ் மாகாணத்தின் அணியை வாங்கி அதற்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் என்னும் பெயரை வைத்துள்ளது.
இந்த அணியில் பிராவோ, டெவன் கான்வே, மிட்ச்சல் சான்டனர் உள்ளிட்ட சில சிஎஸ்கே நட்சத்திரங்கள் புதிதாக எடுக்கப்பட்டனர். மே மாதம் 28ஆம் தேதியுடன் ஓய்வு முடிவு அறிவித்த அம்பத்தி ராயுடு, பிசிசியை விதிமுறைப்படி வெளிநாடுகளுக்கு சென்று லீக் போட்டிகளில் விளையாடலாம் என்பதன் அடிப்படையில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் ஜூன் 15ஆம் தேதி கையெழுத்தானது.