ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கப்படவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாரகி வருகின்றன. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்டவுள்ளன. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் அடுதத ஆண்டு நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகத் தலைவர் அருண் தூமல் நேற்றைய தினம் அறிவித்தார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் புதிய அணியை கட்டமைக்க வேண்டிய பொறுப்பில் அனைத்து அணிகளும் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரோஹித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்டதள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எதிர்காலத்தில் ரோஹித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடி விட்டார். சிஎஸ்கே அணிக்காக விளையாடி அதேபோல் வெற்றிகளை குவித்தால் அது சிறப்பானதாக இருக்கும். ஒருவேளை எம்எஸ் தோனி ஓய்வை அறிவித்தால் சிஎஸ்கேவின் கேப்டன் பதவியும் ரோஹித்தை நோக்கி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.