ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸின் லெவனை தேர்ந்தெடுத்த அம்பத்தி ராயுடு!
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் நிலையில், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ராயுடு கணித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதிலும் இத்தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, நடப்பு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
Trending
மேற்கொண்டு அணியின் மூன்றாம் வரிசையில் ரச்சின் ரவீந்திராவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ள ராயுடு, நான்காம் இடத்தில் ராகுல் திரிபாதியை சேர்த்துள்ளார். இருப்பினும் அந்த இடத்தில் அவர் மேற்கொண்டு தீபக் ஹூடா மற்றும் விஜய் சங்கர் ஆகியோரும் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார். அவர்களைத் தொடர்ந்து அணியின் அதிரடி வீரரான ஷிவம் தூபேவுக்கு ராயுது தனது லெவனில் 5ஆம் இடத்தையே ஒதுக்கியுள்ளார்.
அதன்பின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு 6ஆம் இடத்தையும், மகேந்திர சிங் தோனிக்கு 7ஆம் இடத்தையும் வழங்கியுள்ள ராயுடு, 8ஆவது இடத்தில் மற்றொரு ஆல் ரவுண்டரான சாம் கரணை தேர்ந்தெடுத்துள்ளார். இதுதவிர்த்து பந்துவீச்சை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் ஆஸ்வின், அன்ஷுல் காம்போ மற்றும் மதீஷா பதிரானா ஆகியோருக்கு தனது அணியில் வாய்ப்பு வழங்கியுள்ள அவர், நூர் அஹ்மத், கலீல் அஹ்மத், முகேஷ் சௌத்ரி உள்ளிட்டோருக்கு அவர் வாய்ப்பு வழங்கவில்லை.
Also Read: Funding To Save Test Cricket
அம்பதி ராயுடு தேர்ந்தெடுத்த சிஎஸ்கே லெவன்: ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திர, ராகுல் திரிபாதி/தீபக் ஹூடா/விஜய் சங்கர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, சாம் கரன், ரவிச்சந்திரன் அஷ்வின், அன்ஷுல் காம்போஜ், மதிஷா பதிரானா.
Win Big, Make Your Cricket Tales Now