INDW vs NZW: தொடரிலிருந்து அமெலியா கெர் விலகல்; நியூசிலாந்துக்கு பின்னடைவு!
காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து நட்சத்திர வீராங்கனை அமெலியா கெர் விலகியுள்ளார்.
நியூசிலாந்து மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன்செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது.
Trending
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் அமெலியா கெர் இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பாட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது தனது பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய அமெலியா கெர் அச்சமயத்தில் காயமடைந்தார். இதன் காரணமாக இப்போட்டியில் அவர் 9ஆம் இடத்தில் களமிறங்கியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25 ரன்களையும் சேர்த்திருந்தார். இந்நிலையில் அமெலியா கெர்ரின் காயம் குறித்து இன்றைய தினம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, ஸ்கோன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதுடன், அதிலிருந்து அமெலிய கெர் குணமடைய மூன்று வாரங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் நாளைய தினம் நியூசிலாந்து செல்லும் அமெலியா கெர் அங்கு தனது மருத்துவ சிகிச்சையை தொடர்வார் என்றும், அதன் காரணமாக இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகினார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதேசமயம் அமெலியா கெர் தொடரிலிருந்து விலகினாலும், அவருக்கான மாற்று வீராங்கனை யாரையும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணி ஏற்கெனவே இத்தொடரின் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், தற்சமயம் அணியின் முக்கிய வீராங்கனையும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து மகளிர் அணி: சுஸி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், லாரன் டவுன், சோஃபி டெவின்(கே), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், மோலி பென்ஃபோல்ட், ஈடன் கார்சன், லியா தஹு, ஹன்னா ரோவ், ஃபிரான் ஜோனாஸ், போலி இங்கிலிஸ்
Win Big, Make Your Cricket Tales Now